Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – செவ்வாய் 8/12/2015

இன்றைய ராசிபலன் – செவ்வாய் 8/12/2015

299
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.45 – 8.45  காலை – 9.00 – 10.30
மாலை – 4.45 – 5.45  மாலை – 3.00 – 4.30

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி


mesahamமேசம்: எளிதில் முடித்து விடலாம் என நினைத்த காரியங்களைக் கூட போராடி முடிக்க வேண்டி வரும். எதிர்பாராத பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


rishabamரிஷபம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். வெளி வட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலமாக லாபமடைவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். எதிர்பார்புகள் பூர்த்தியாகும் நாள்.


mithunamமிதுனம்: இன்றையதினம் சமயோஜிதமாகவும், சாதுர் யமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் ராஜ தந்திரத்தால் லாபத்தை அதிகரிப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.


kadakamகடகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.


simamசிம்மம்: கடினமான காரியங்களையும் நீங்கள் எளிதாக முடிப்பீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் புது திட்டங்கள் தீட்டுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.


kanniகன்னி: வருங்கால திட்டத்தில் ஒன்று நிறை வேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.


thulamதுலாம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். தோற்றப் பொலிவுக் கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.


viruchigamவிருச்சிகம்: உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் மதிப்பார்கள். சாதித்துக் காட்டும் நாள்.


dhanusu

தனுசு: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பாராட்டப்படுவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.


magaramமகரம்: இன்று நீங்கள் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். குடும்ப விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் சலுகைகள் தாமதமாக கிடைக்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.


kumbamகும்பம்: இன்று உங்களுக்கு மன இறுக்கங்கள் உருவாகும். சில விஷயங்களுக்கு உங்களின் அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.


meenamமீனம்: கடந்த சில நாட்களாக இருந்த குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். புதிய சிந்தனைகள் தோன்றும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.