Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – புதன் 02/03/2016

இன்றைய ராசிபலன் – புதன் 02/03/2016

301
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 9.30 – 10.30  காலை – 7.30 – 9.00
மாலை – 4.30 – 5.30  மாலை – 12.00 – 1.30

சந்திராஷ்டமம்: பரணி, கார்த்திகை


mesahamமேசம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவு பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள்.  வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சாதிக்கும்  நாள்.


rishabam

ரிஷபம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு  கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்புக் கூடும் நாள்.


mithunamமிதுனம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்து செல்லும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். புதியவர்களை நம்பி ஏமாற  வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.


kadakamகடகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். செலவுகளைக் குறைக்க  திட்டமிடுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். மனநிறைவு கிட்டும்  நாள்.


simamசிம்மம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். மனைவிவழியில் மதிக்கப்படுவீர்கள். கல்யாணப் பேச்சு  வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


kanniகன்னி: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வீடு, வாகன பராமரிப்புச்  செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.


thulamதுலாம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். மனைவிவழியில் மதிக்கப்படுவீர்கள். கல்யாணப் பேச்சு  வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


viruchigamவிருச்சிகம்: இன்று நீங்கள் சில வேலைகளை உங்கள் மேற்பார்வையில் முடிப்பது நல்லது. யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள்.  உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் புது முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். நாவடக்கம்  தேவைப்படும் நாள்.


dhanusuதனுசு: குடும்பத்தில் நிம்மதி உண்டு. அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். வராது என்றிருந்த பணம் வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப்  பேசுவார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.


magaramமகரம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சொத்து பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.  வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். நினைத்ததை முடிக்கும் நாள்.


kumbamகும்பம்: சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று  வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.


meenamமீனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன்  நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில்வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here