Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – புதன் 04/05/2016

இன்றைய ராசிபலன் – புதன் 04/05/2016

411
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 9.30 – 10.30  காலை – 7.30 – 9.00
மாலை – 4.30 – 5.30  மாலை – 12.00 – 1.30

சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்


mesaham

மேசம்: தன்னிச்சையாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் நினைப்பதை முடித்துக் காட்டுவீர்கள். தைரியம் கூடும் நாள்.


rishabamரிஷபம்: இன்று உங்களுக்கு உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். உங்களின் பலம் எது, பலவீனம் எது என்பதை உணர்ந்து செயல்படுவது நல்லது. மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களால் டென்ஷன் ஏற்படும். சிக்கனம் தேவைப்படும் நாள்.


mithunam

மிதுனம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர் கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.  


kadakam

கடகம்: இன்று நீங்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் விரைந்து முடியும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மனசாட்சி படி செயல்படும் நாள்.


simam

சிம்மம்: வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் இதமாகப் பேசி வேலை வாங்குவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.


kanni

கன்னி: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஆதரவுக் கிட்டும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.


thulam

துலாம்: இன்று நீங்கள் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. லேசாக தலை வலிக்கும். யாரையும் நம்பி உறுதிமொழி தர வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். நாவடக்கம் தேவைப்படும் நாள். 


viruchigam

விருச்சிகம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். வருமானம் உயரும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். விருந்தினர்களின் வருகை உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.


dhanusuதனுசு: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.   


magaramமகரம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.


kumbamகும்பம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தொட்டது துலங்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள். 


meenamமீனம்: இன்று உங்களுக்கு மனஉளைச்சல் ஏற்படும். நண்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here