Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – புதன் 06/01/2016

இன்றைய ராசிபலன் – புதன் 06/01/2016

299
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 9.00 – 10.00  காலை – 7.30 – 9.00
மாலை – 4.30 – 5.30  மாலை – 12.00 – 1.30

சந்திராஷ்டமம்: பரணி


mesahamமேசம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.


rishabamரிஷபம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர் பார்த்திருந்த தொகை கைக்கு வரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.


mithunamமிதுனம்: இன்று நீங்கள் எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட போராடி முடிப்பீர்கள். நெருங்கிய வரிடம் குறைகளை சொல்லி ஆதங்கப்படு வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.


kadakamகடகம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். கடினமாக உழைத்து முன்னேறும் நாள்.


simamசிம்மம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். இனிமையான நாள்.


kanniகன்னி: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நட்பு வட்டம் விரியும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.


thulamதுலாம்: உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக பேசுவீர்கள், செயல்படுவீர்கள். உங்கள் சகோதரர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். மனைவிவழியில் ஆதரவு பெருகும். வி.ஐ.பிகளால் ஆதாய மடைவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். மதிப்புக் கூடும் நாள்.


viruchigamவிருச்சிகம்: பழைய இனிய அனுபவங்கள் நினைவுக்கு வரும். தாய்வழி உறவினர் களுடன் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


dhanusuதனுசு: உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றி கொள்வீர். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.


magaramமகரம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பிறக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். தைரியம் கூடும் நாள்.


kumbamகும்பம்: இன்று நீங்கள் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு வந்து செல்லும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். இடம், பொருள், ஏவலறிந்து செயல்பட வேண்டிய நாள்.


meenamமீனம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். உங்கள் வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும். வாகனத்தை சீர் செய்வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிட்டும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here