Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – புதன் 06/04/2016

இன்றைய ராசிபலன் – புதன் 06/04/2016

354
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 9.30 – 10.30  காலை – 7.30 – 9.00
மாலை – 5.30 – 6.00  மாலை – 12.00 – 1.30

சந்திராஷ்டமம்: பூரம்


mesaham

மேசம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் வீண் விவாதம் வந்து போகும். வியாபாரத்தில் வேலையாட் களிடம் கனிவாக பேசப்பாருங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


rishabam

ரிஷபம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.


mithunam

மிதுனம்: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சாதிக்கும் நாள். 


kadakam

கடகம்: இன்று உங்களுக்கு மறதி, எதிர்காலம் குறித்த கவலைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து விலகும். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். உத்யோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.


simam

சிம்மம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். திடீர் பயணம் உண்டு. புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.


kanni

கன்னி: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.


thulam

துலாம்: இன்று நீங்கள் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.


viruchigam

விருச்சிகம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். சொந்த-பந்தங்களுடன் மனத்தாங்கல் வரும். உடல் நலம் பாதிக்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.


dhanusu

தனுசு: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். திடீர் யோகம் கிட்டும் நாள்.


magaram

மகரம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


kumbam

கும்பம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன் யம் பிறக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வாகனத்தை சரி செய்வீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.


meenam

மீனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளை கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். நாடி வந்தவர் களுக்கு உதவி செய்வீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியா பாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். இனிமையான நாள்.