Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – புதன் 07/09/2016

இன்றைய ராசிபலன் – புதன் 07/09/2016

220
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 9.15 – 10.15  காலை – 7.30 – 9.00
மாலை – 4.45 – 5.45  மாலை – 12.00 – 1.30

சந்திராஷ்டமம்: ரேவதி, அசுபதி


mesahamமேசம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.


rishabamரிஷபம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியமான முடிவுகளெடுக்கும் நாள்.


mithunamமிதுனம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். மனதிற்கு இதமான செய்தி வரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள். 


kadakamகடகம்: குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் மோதல்கள் வேண்டாமே. எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.


simamசிம்மம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.


kanniகன்னி: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். அழகு, இளமைக் கூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மரியாதைக் கூடும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.


thulamதுலாம்: இன்று நீங்கள் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.


viruchigamவிருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள்.


dhanusuதனுசு: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உதவுவார்கள். எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.


magaramமகரம்: இன்று நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை பார்க்க வேண்டிவரும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.


kumbam

கும்பம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.


meenamமீனம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.