Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – புதன் 09/03/2016

இன்றைய ராசிபலன் – புதன் 09/03/2016

338
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 9.30 – 10.30  காலை – 7.30 – 9.00
மாலை – 4.30 – 5.30  மாலை – 12.00 – 1.30

சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்


mesahamமேசம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.  வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.


rishabam

ரிஷபம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும்.  தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


mithunamமிதுனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை  ஏற்பர். திடீர் யோகம் கிட்டும் நாள். 


kadakamகடகம்: எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். சகோதரர்களை  பகைத்துக் கொள்ளாதீர்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள்.  அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


simamசிம்மம்: மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. பழைய கடனில்  ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். திடீர் சந்திப்புகள் நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும்.  சாதித்துக் காட்டும் நாள்.


kanni

கன்னி: இன்று நீங்கள் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் ரகசியங்களை  வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.


thulam

துலாம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.  வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். எதிர்பாராத நன்மைகள் கிட்டும் நாள்.


viruchigam

விருச்சிகம்: இன்று உங்களுக்கு வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய  நாள்.


dhanusuதனுசு: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். வெளிவட்டாரத்தில்  மதிக்கப்படுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.  தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.


magaramமகரம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். புதியவர்கள்  அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.


kumbamகும்பம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு.  வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.


meenamமீனம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். வியாபாரத்தில்  புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here