Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – புதன் 10/02/2016

இன்றைய ராசிபலன் – புதன் 10/02/2016

1980
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 9.30 – 10.30  காலை – 7.30 – 9.00
மாலை – 4.30 – 5.30  மாலை – 12.00 – 1.30

சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்


mesahamமேசம்: எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.


rishabamரிஷபம்: கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.


mithunamமிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த மன உளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் இருந்த சலசலப்புகள் நீங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மகிழ்ச்சியான நாள்.


kadakamகடகம்: திடமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் பெருமை களை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.


simamசிம்மம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.


kanniகன்னி: எதிர்ப்புகளை யும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருக்கு வீண் டென்ஷன் வந்துச் செல்லும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.


thulamதுலாம்: கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்-. வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.


viruchigamவிருச்சிகம்: இன்று உங்களுக்கு வீண் டென்ஷன் வந்துச் செல்லும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வராது என்றிருந்த பணம் வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள்-. வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.


dhanusuதனுசு: தன்னம்பிக்கை யுடன் பொதுக் காரியங்க ளில் ஈடுபடுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். உங்களுடைய ஆலோச னைகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். மதிப்புக் கூடும் நாள்.


magaramமகரம்: அடுக்கடுக்கான வேலைகளால் அவதிபடு வீர்கள். உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரம், உத் யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். தடைகளை தாண்டி முன்னே றும் நாள்.


kumbamகும்பம்: முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நிகழும். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.


meenamமீனம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர்கள் மதிப்பார்கள். உடல் நலம் சீராகும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மனநிம்மதி கிட்டும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here