இன்றைய ராசிபலன் – புதன் 10/08/2016

இன்றைய ராசிபலன் – புதன் 10/08/2016

269
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 9.15 – 10.15  காலை – 7.30 – 9.00
மாலை – 4.45 – 5.45  மாலை – 12.00 – 1.30

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி


mesaham

மேசம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.


rishabamரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். வர வேண்டி பணம் கைக்கு வரும். சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். உடல் நலம் சீராகும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.


mithunamமிதுனம்: இன்று நீங்கள் தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். யதார்த்தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகபுரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.


kadakamகடகம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரம் செழிக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். திட்டம் நிறைவேறும் நாள்.


simam

சிம்மம்: சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. உறவினர்கள், நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.


kanniகன்னி: எதையும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள்.

பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். இனிமையான நாள்.


thulam

துலாம்: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். தாய்வழியில் மதிப்புக் கூடும். புது வேலை அமையும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


viruchigamவிருச்சிகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்துப் பிரச்சனையில் நல்ல தீர்வு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்கள் ஆலோசனையை ஏற்பார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


dhanusu

தனுசு: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.


magaramமகரம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலமாக லாப மடைவீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.


kumbamகும்பம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வீட்டை விரிவுப்படுத்துவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். அமோகமான நாள்.


meenamமீனம்: பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.

NO COMMENTS

LEAVE A REPLY