Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – புதன் 11/05/2016

இன்றைய ராசிபலன் – புதன் 11/05/2016

424
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 9.30 – 10.30  காலை – 7.30 – 9.00
மாலை – 5.30 – 6.00  மாலை – 12.00 – 1.30

சந்திராஷ்டமம்: மூலம்


mesaham

மேசம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.


rishabamரிஷபம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மை யானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.


mithunam

மிதுனம்: இன்று உங்களது புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாக புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களைக் குறைக் கூற வேண்டாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.   


kadakam

கடகம்: உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


simam

சிம்மம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்வீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். தொட்டது துலங்கும் நாள்.


kanni

கன்னி: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சாதிக்கும் நாள்.


thulam

துலாம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பம், வீண் டென்ஷன் விலகும். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். பணவரவு திருப்தி தரும். தள்ளி போன விஷயங்கள் உடனே முடியும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. தடைகள் உடைபடும் நாள். 


viruchigam

விருச்சிகம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். சகோதர வகையில் பயனடைவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.


dhanusuதனுசு: பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


magaram

மகரம்: இன்று நீங்கள் ஓய்வின்றி உழைக்க வேண்டி வரும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். வியாபாரத்தில் மறைமுக பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் அலைக்கழிக்கப்படுவீர்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.


kumbamகும்பம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைகாட்டுவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.


meenamமீனம்: கடந்த இரண்டு நாட்களாக இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.