Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – புதன் 13/01/2016

இன்றைய ராசிபலன் – புதன் 13/01/2016

347
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 9.30 – 10.30  காலை – 7.30 – 9.00
மாலை – 4.30 – 5.30  மாலை – 12.00 – 1.30

சந்திராஷ்டமம்: ஆயில்யம்


mesahamமேசம்: இன்று நீங்கள் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை. வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என் பதை உணர்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.


rishabamரிஷபம்: அநாவசியச் செலவுகளை குறைக்கப் பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களால் மறைமுக தொந்தரவுகள் வரக்கூடும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


mithunamமிதுனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். உங்களைச்சுற்றி யிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாமடைவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலுவலகத் தில் மரியாதைக் கூடும். புதுமை படைக்கும் நாள்.


kadakamகடகம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். சகோதரி உதவுவார். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.


simamசிம்மம்: கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். விருந்தினர் வருகை உண்டு. வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சியால் முன்னேறும் நாள்.


kanniகன்னி: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக் கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத் தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். உற்சாகமான நாள்.


thulamதுலாம்: இன்று எதிர்பார்த்த காரியங்கள் அலைச்சலின் பேரில் முடியும். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.


viruchigamவிருச்சிகம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர் காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.


dhanusuதனுசு: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.


magaramமகரம்: எதையும் சாதிக்கும் தன்னம் பிக்கை வரும். மூத்த சகோதர வகையில் உதவி கள் கிடைக்கும். விலை உயர்ந்தப் பொருட் கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மதிப்புக் கூடும் நாள்.


kumbamகும்பம்: இன்று நீங்கள் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு வந்து செல்லும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். இடம், பொருள், ஏவலறிந்து செயல்பட வேண்டிய நாள்.


meenamமீனம்: பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here