Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – புதன் 13/04/2016

இன்றைய ராசிபலன் – புதன் 13/04/2016

459
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 9.30 – 10.30  காலை – 7.30 – 9.00
மாலை – 4.30 – 5.30  மாலை – 12.00 – 1.30

சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை


mesahamமேசம்: நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். தாயாருக்கு கை, கால் வலி வந்துப் போகும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர் கள். உத்யோகத்தில் சூழ்ச்சி களை முறியடிப்பீர்கள். நன்மை கிட்டும் நாள்.


rishabamரிஷபம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தொட்டது துலங்கும் நாள்.


mithunamமிதுனம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றி யமைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். சாதிக்கும் நாள். 


kadakam

கடகம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.


simam

சிம்மம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மை யானவர்களை கண்டறிவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.


kanni

கன்னி: உங்களின் அறி வாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சரி செய்வீர்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


thulamதுலாம்: ஒரு விஷயத்தை நினைத்து அதிகளவில் குழப்பம் அடைவீர்கள். பிள்ளைகளின் உணர்வு களைப் புரிந்துக் கொள் ளுங்கள். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியா பாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங் கடங்கள் வரும். போராடி வெல்லும் நாள்.


viruchigam

விருச்சிகம்: இன்று நீங்கள் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். உங்களை யாரும் கண்டுக் கொள்வதில்லை, உங்களுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் புலம்புவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். நாவடக்கம் தேவைப்படும் நாள்


dhanusu

தனுசு: இன்று வேலைசுமை இருக்கும். நண்பகல் முதல் குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத் தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.


magaram

மகரம்: இன்று நீங்கள் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.


kumbam

கும்பம்: இன்று உங்களுக்கு வீண் டென்ஷன் வந்து செல்லும். நண்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.


meenam

மீனம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்த வர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார் கள். புது வாகனம் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியா பாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here