Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – புதன் 16/12/2015

இன்றைய ராசிபலன் – புதன் 16/12/2015

239
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 9.15 – 10.15  காலை – 7.30 – 9.00
மாலை – 4.45 – 5.45  மாலை – 12.00 – 1.30

சந்திராஷ்டமம்: பூசம்


mesahamமேசம்: வெளிவட்டாரத்தில் நிதானம் தேவை. குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதர வகையில் பிணக்குகள் வரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


rishabamரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நற்செயல் புரியும் இனிமையான நாள்.


mithunamமிதுனம்: இன்று சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. நண்பர், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வேலையாட்களால் தொந்தரவுகள் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமாக பழகுங்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.


kadakamகடகம்: சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலனாகும் நாள்.


simamசிம்மம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வீர்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


kanniகன்னி: இன்று நீங்கள் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து போகும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.


thulamதுலாம்: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உங்களுக்கு உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். மனைவிவழியில் நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. திறமைகள் வெளிப்படும் நாள்.


viruchigamவிருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிகிடந்த வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புதிய பாதை தெரியும் நாள்.


dhanusu

தனுசு: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை நீங்கள் மீண்டும் பெறுவீர்கள். உறவினர்கள் உங்களை புரிந்துக்கொள்வார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நல்ல நாள்.


magaramமகரம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும்.  உறவினர்களில் உண்மை யானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளால் ஆதாய மடைவீர்கள். கனவு நனவாகும் நாள்.


kumbamகும்பம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக்கொள்வீர்கள். பிரபலங்கள் உங்களுக்கு அறிமுகமாவார்கள். உங்கள் பழைய பிரச்சனைகளைப் பேசி சுமூகமான முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுகள் கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.


meenamமீனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். சொத்து சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியம் கூடும் நாள்.