Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – புதன் 18/05/2016

இன்றைய ராசிபலன் – புதன் 18/05/2016

423
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 9.30 – 10.30  காலை – 7.30 – 9.00
மாலை – 4.30 – 5.00  மாலை – 12.00 – 1.30

சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி


mesaham

மேசம்: இன்று நீங்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.


rishabamரிஷபம்: உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


mithunam

மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கி தெளிவு பிறக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். உற்சாகமான நாள்.


kadakam

கடகம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்களால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். சாதிக்கும் நாள்.


simam

சிம்மம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். சிறப்பான நாள்.


kanni

கன்னி: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.


thulam

துலாம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். அழகு, இளமைக் கூடும். வாகனப் பழுது நீங்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.


viruchigam

விருச்சிகம்: எதிர்ப்புகள் அடங்கும். நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள்.  வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.


dhanusuதனுசு: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். புதுமை படைக்கும் நாள்.


magaram

மகரம்: எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அமோகமான நாள்.


kumbamகும்பம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


meenamமீனம்: கடந்த இரண்டு நாட்களாக இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here