Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – புதன் 18/11/2015

இன்றைய ராசிபலன் – புதன் 18/11/2015

157
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம் குளிகை
காலை – 9.15 – 10.15  காலை – 7.30 – 9.00  காலை – 10.30 – 12.00
மாலை – 4.45 – 5.45  மாலை – 12.00 – 1.30

சந்திராஷ்டமம்: திருவாதுரை, புனர்பூசம்


mesahamமேசம்: உயர்ந்த சிந்தனை உருவாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். நீங்கள் செய்யும் சிறிய காரியம் கூட பன்மடங்கு நன்மை தரும். உயர்ந்த சிந்தனை உருவாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் பாராட்டு கிடைக்கும். வியாபாரத்தில் பணவரவு அதிகரிக்கும். பயணங்கள் பலன் தரும். சிறப்பான நாள்.


rishabam

ரிஷபம்: அதிக அலைச்சல் இல்லாமல் ஓய்வு எடுப்பது நல்லது நல்லது. பயணச் செலவு ஏற்படும். தியானம், தெய்வ வழிபாடு மன அமைதியை தரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் பணவரவை விட செலவு அதிகரிக்கும். குடும்பத்திற்குள் வீண் சந்தேகங்களை தவிர்க்க வேண்டிய நாள்.


mithunam

மிதுனம்: நீண்ட நாள் காணாமல் தேடிய பொருள் கிடைக்கும். மனதில் புத்துணர்வு பொங்கும். எல்லோரிடமும் ஆதயத்துடன் பழகுவீர்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை பணியமர்துவீர்கள். எடுத்த காரியங்களை ஆதாயத்துடன் முடிக்கும் நல்ல நாள்


kadakam

கடகம்: பணவரவை விட செலவு அதிகரிக்கும். எந்த காரியங்களை எடுத்தாலும் பொறுமையுன் செயல்படுவது நல்லது. பயணச் செலவுகள் ஏற்படும். உத்யோகத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரம், தொழிலில் மந்த நிலை ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்த்து போறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்.


simam

சிம்மம்: பணவருமானம் அதிகம் கிடைக்கும். குடும்பத்தில் உங்களுக்கு மதிப்பு கூடும். சிறிய காரியங்கள் கூட பன்மடங்கு நன்மை தரும். உயர்ந்த சிந்தனை உருவாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் பாராட்டு கிட்டும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். எந்த செயலையும் பதறாமல் செய்தால் நன்மை உண்டாகும் நல்ல நாள்.


kanni

கன்னி: குடும்பத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இன்றைய நாள் உங்களுக்கு சோதனை நாளாக அமையும். குடும்ப விடயங்களை வெளியில் சொல்ல வேண்டாம். உத்யோகத்தில் உயர் அதிகாரியின் கோபத்திற்கு ஆளாகலாம். வியாபாரத்தில் சிக்கல்கள் உருவாகும். சோதனையால் சோர்வு ஏற்படும் நாள்.


thulam

துலாம்: கல்யாண பேச்சுவார்த்தை தடையுடன் முடிவாகும். வேலைகள் செய்து முடிக்க தாமதம் ஏற்படும். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நன்மை தரும். உறவினர்கள், நண்பர்களிடம் உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து போங்கள். தொழிலில் சில தடைகள் ஏற்படலாம். சாமர்த்தியம் தேவைப்படும் நல்ல நாள்.


viruchigam

விருச்சிகம்: மனக் கவலை வர வாய்ப்பு உள்ளது. நிதானத்துடன் செயல்படுவது நல்லது. மற்றவர்களிடம் அதிகம் பேச வேண்டம். மனதில் ஒருவித அச்சம் உருவாகும். தியானம், தெய்வ வழிபாடு மன அமைதியை கொடுக்கும். தொழிலில் மந்தநிலை உருவாகும். பயம் இல்லாமல் இருந்தால் நன்மை ஏற்படும் நாள்.


dhanusu

தனுசு: குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். எடுத்த காரியங்களை எதிர்ப்புகள் வந்தாலும் எளிதாக முடிப்பீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். சகோதர, சகோதரிகள் பாசமாக இருப்பார்கள். வேலைகளில் இருந்த தடைகள் மாரும். வியாபரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனக் கவலை நீங்கி தெளிவு பிறக்கும் நல்ல நாள்.


magaram

மகரம்: முக்கிய விடயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. புதிய முயற்ச்சிகள் தள்ளிப் போய் முடியும். உங்கள் நிறை, குறைகளை குடும்பத்தார் எடுத்து சொன்னால் கோபப்படாதீர்கள். யாரையும் நம்பி உறுதிமொழி தரவேண்டாம். வியாபாரத்தில் ரகசியங்களை காப்பது நல்லது. எதிலும் பொறுமை தேவைப்படும் நாள்.


kumbam

கும்பம்: நண்பர்கள், உறவினர்களிடம் உங்களின் மதிப்பு உயரும். நீங்கள் செய்யும் எந்தவொரு செயலிலும் உங்களின் மேன்னை மேலோங்கி காணப்படும். உத்யோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டை பெருவீர்கள். தொழிலில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் பலன் தரும். அந்தஸ்த்து உயரும் நல்ல நாள்.


meenam

மீனம்: எடுத்த காரியங்கள் யாவும் வெற்றியை தேடித்தரும். நண்பர்கள், உறவினர்கள் ஆதரவு பெருகும். நல்லவர்கள் தொடர்பு கிடைக்கும். பயணங்களால் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நல்ல செய்தி வந்து சேரும் நல்ல நாள்.