Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – புதன் 20/01/2016

இன்றைய ராசிபலன் – புதன் 20/01/2016

316
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.30 – 8.30  காலை – 9.00 – 10.30
மாலை – 4.30 – 5.30  மாலை – 3.00 – 4.30

சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்


mesahamமேசம்: இன்று நீங்கள் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். குடும்பத்தில் சலசலப் புகள் வரும். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.


rishabamரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி சுறுசுறுப் பாவீர்கள். குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.


mithunamமிதுனம்: தன்னம்பிக்கை யுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.


kadakamகடகம்: விவாதங்களை தவிர்க்கப்பாருங்கள். குடும்பத்தில் உள்ளவர்க ளுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்காதீர்கள். பழைய கசப்பான அனுபவங்கள் நினைவுக்கு வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.


simamசிம்மம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் பரிவாக பேசுங்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். யாருக்கும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


kanniகன்னி: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப் போர் நீங்கும். பணவரவு திருப்தி தரும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.


thulamதுலாம்: பழைய சிக்கல் களை தீர்க்க புது வழி பிறக்கும். தாயாருடன் வீண் விவாதங்கள் வந்து போகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


viruchigamவிருச்சிகம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உறுது ணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவி யில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்ககள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஒங்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.


dhanusuதனுசு: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பழைய உறவினர், நண் பர்களை சந்தித்து மகிழ்வீர் கள். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். சாதித்துக் காட்டும் நாள்.


magaramமகரம்: புதிய சிந்தனைகள மனதில் தோன்றும். பிள் ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.


kumbamகும்பம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர் வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்று வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக் கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோக மான நாள்.


meenamமீனம்: ஆன்மிக பெரியோரின் ஆசி கிட்டும். எதையும் தாங்கும் மன வலிமை கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு பெருகும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் உங்கள் கொள்கைகளில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here