Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – புதன் 2/12/2015

இன்றைய ராசிபலன் – புதன் 2/12/2015

377
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 9.15 – 10.15  காலை – 7.30 – 9.00
மாலை – 4.45 – 5.45  மாலை – 12.00 – 1.30

சந்திராஷ்டமம்: உத்திராடம்


mesahamமேசம்: மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து புது திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் திறமைகள் வெளிப்படும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலனாகும். சிறப்பான நாள்.


rishabamரிஷபம்: விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். எதிர்ப்புகள் அடங்கும். பால்ய நண்பர்கள் உதவுவர். புது வேலை அமையும். தாய்வழி உறவினர்களால் டென்ஷன் ஏற்படும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உழைப்பால் உயரும் நல்ல நாள்.


mithunamமிதுனம்: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அழகு, இளமைக் கூடும். ஆடை, ஆபரணம் சேரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். புதிய அத்தியாயம் தொடங்கும் நல்ல நாள்.


kadakamகடகம்: புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல் படுவீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோ கத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். முயற்சிகள் பலனாகும் நாள்.


simamசிம்மம்: எதிலும் கவனம் தேவை. இன்று நீங்கள் ஓய்வின்றி உழைக்க வேண்டி வரும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். வியாபாரத்தில் வேலையாட்களால் மறைமுகப் பிரச்னைகள் வந்து நீங்கும். உத்யோகத்தில் பிறரின் குறைகளை நாசூக்காக சுட்டிக் காட்டுங்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.


kanniகன்னி: விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிரச்னைகள் வெகுவாக குறையும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.


thulamதுலாம்:  இன்று நீங்கள் ஒரே நாளில் முக்கியமான பல வேலைகளை பார்க்க வேண்டி வரும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். உத்யோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.


viruchigamவிருச்சிகம்: மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். வியாபாரத்தை புது இடத்திற்கு மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். நன்மை கிட்டும் நல்ல நாள்.


dhanusu

தனுசு: பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர் கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். அமோகமான நாள்.


magaramமகரம்: அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும் நாள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்று உயர்வீர்கள். தொழிலில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது. விவேகத்துடன் செயல்பட வேண்டிய நல்ல நாள்.


kumbamகும்பம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பக்குவமாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கரை காட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும்.உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். கனவு நனவாகும் நல்ல நாள்.


meenamமீனம்: குடும்பத்தல் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். போராடி வெல்லும் நாள்.