Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – புதன் 22-06-2016

இன்றைய ராசிபலன் – புதன் 22-06-2016

351
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 9.30 – 10.30  காலை – 7.30 – 9.00
மாலை – 3.30 – 4.30  மாலை – 12.00 – 1.30

சந்திராஷ்டமம்: திருவாதிரை


mesaham

மேசம்: இன்று நீங்கள் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். அதிகம் பேச வேண்டாம். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.


rishabamரிஷபம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வீட்டை விரிவுப்படுத்துவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.


mithunam

மிதுனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். புது பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மதிப்புக் கூடும் நாள்.


kadakamகடகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள் வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர் கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.


simamசிம்மம்: பிரச்னைகளின் ஆனிவேரைக் கண்டறிவீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


kanni

கன்னி: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். புதிய சிந்தனைகள் தோன்றும். வெளிவட் டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். உற்சாகமான நாள்.


thulam

துலாம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன் பிறந்தவர்களால் பயனடை வீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். புகழ், கௌரவம் கூடும் நாள்.


viruchigamவிருச்சிகம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். யதார்த்தமாகப் பேசிக் கவர்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். இனிமையான நாள்.


dhanusuதனுசு: குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சித்து பேச வேண்டாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.


magaramமகரம்: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். பழைய கடன் பிரச்னை  கட்டுக்குள் வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.


kumbamகும்பம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.


meenamமீனம்: கணவன் – மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். சில முடிவுகள் எடுப்பீர்கள். அழகு, இளமைக் கூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here