Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – புதன் 24/08/2016

இன்றைய ராசிபலன் – புதன் 24/08/2016

298
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 9.15 – 10.15  காலை – 7.30 – 9.00
மாலை – 4.45 – 5.45  மாலை – 12.00 – 1.30

சந்திராஷ்டமம்: ஹஸ்தம், சித்திரை


mesahamமேசம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த உடல் அசதி, மனச் சோர்வு நீங்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புதுமை படைக்கும் நாள்.


rishabamரிஷபம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். சொத்துப் பிரச்னைக்குசுமூக தீர்வு காண்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகம். வெற்றி பெறும் நாள்.


mithunamமிதுனம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். அழகு, இளமைக் கூடும். ஆடை, ஆபரணம் சேரும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புதிய பாதை தெரியும் நாள். 


kadakam

கடகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற் கொள்வீர்கள். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்து வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.


simamசிம்மம்: தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வேலை அமையும். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். தொழில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.


kanniகன்னி: இன்று நீங்கள் உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண் டாம். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.


thulamதுலாம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


viruchigam

விருச்சிகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளை களால் சொந்த-பந்தங்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.


dhanusuதனுசு: கணவன் – மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.


magaram

மகரம்: மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திறமைகள் வெளிப்படும் நாள்.


kumbam

கும்பம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விசேஷங் களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தல் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.


meenam

மீனம்: பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here