Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – புதன் 25/11/2015

இன்றைய ராசிபலன் – புதன் 25/11/2015

161
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம் குளிகை
காலை – 6.15 – 7.15  காலை – 7.30 – 9.00  காலை – 10.30 – 12.00
மாலை – 4.45 – 5.45  மாலை – 1.30 – 3.00

சந்திராஷ்டமம்: உத்திரம்


mesahamமேசம்: நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி வந்து சேரும். செயலில் வேகம் காட்டுவீர்கள். நீண்ட நாள் முடியாத காரியம் புதிய முயற்சியால் நிறைவேறும். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் நன்மதிப்பு உயரும். பெண்களால் செலவு வந்து சேரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்யோகத்தில் பிரச்சனைகள் நீங்கும். நன்மைகள் நடக்கும் நல்ல நாள்.


rishabam

ரிஷபம்: குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். சகோதர, சகோதரிகள் பாசமாக இருப்பார்கள். புதியவர்களிடம் அதிகம் பேச வெண்டாம். வேலைகளில் இருந்த தடைகள் மாரும். வியாபரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனக் கவலை நீங்கி தெளிவு பிறக்கும் நல்ல நாள்.


mithunam

மிதுனம்: மனக் கவலை வர வாய்ப்பு உள்ளது. நிதானத்துடன் செயல்படுவது நல்லது. மனதில் ஒருவித அச்சம் உருவாகும். தியானம், தெய்வ வழிபாடு மன அமைதியை கொடுக்கும். உத்யோகத்தில் தொய்வு ஏற்படும் தொழிலில் மந்தநிலை உருவாகும். பயம் இல்லாமல் இருந்தால் நன்மை ஏற்படும் நல்ல நாள்.


kadakam

கடகம்: புதிய அத்தியாயம் தொடங்கும். நண்பர்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய உறவினர்கள் இல்லம் தேடி வருவார்கள். நண்பர்களுக்காக சில செலவுகளை செய்து மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சி புதிய உச்சத்தை தொடும். வராத பணம் வந்து சேரும் நல்ல நாள்.


simam

சிம்மம்: குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். இன்று உங்கள் வளர்ச்சிக்கு நீங்களே தடை போடும் நாள். தேவையில்லாத பேச்சினை குறைத்துக்கொள்வது நல்லது. உத்யோகத்தில் மறைமுக தடங்கல் இருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் மனஅழுத்தம் ஏற்படும். எதிலும் பொருமை தேவைப்படும் நல்ல நாள்.


kanni

கன்னி: குடும்பத்தில் மனத்தாங்கள் வரும். கவனமாக இருந்தால் பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உடல்நலம் ஆரோக்கியம் பெற மருத்துவ சிகிச்சை பெற நேரிடும். அரசியல்வாதிகளால் பிரச்சனை வந்து சேரும். வியாபாரத்தில் மற்றவர்களிடம் அமைதியான போக்கை கையாலுங்கள். எதிலும் பொறுமை தேவைப்படும் நல்ல நாள்.


thulam

துலாம்: பகைவர்களால் இருந்த தொல்லை இடம் தெரியாமல் விலகும். உடன்பிறந்தோர் வகையில் நன்மை உண்டு. எடுத்த காரியங்களை எதிர்ப்புகள் வந்தாலும் எளிதாக முடிப்பீர்கள். முடிந்த அளவில் இறைப்பணி செய்து மகிழ்வீர்கள். உத்யோகதில் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவுவார்கள். வியாபாரம் வளர்ச்சி பெரும் நல்ல நாள்.


viruchigam

விருச்சிகம்: நல்லவர்கள் தொடர்பு வந்து சேரும். நண்பர்கள் ஆதரவு கூடும். சொத்துக்கள் பெற நல்ல யோகம் உண்டு. உடல் நலம் சுகப்படும். அறிவு, தகுதியை பயன்படுத்தி செயலில் வெற்றி பெருவீர்கள். மனைவியுடன் அன்பில் மகிழ்வீர்கள். தொழிலில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். முயற்சி திருவினையாகும் நல்ல நாள்.


dhanusu

தனுசு: குடும்பத்தில் வரவுக்கேற்ற செலவு இருக்கும். பணவரவு கிடைக்க வாய்ப்புண்டு. உத்யோகத்தில் நன்மதிப்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் சூல்நிலை உருவாகும். நல்லோரின் ஆலோசனை பெறுவதால் மனதில் தன்னம்பிக்கை வளரும் நல்ல நாள்.


magaram

மகரம்: தேவையற்ற பேச்சால் தீங்கு வந்து சேரும். மற்றவர்கள் விடயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வேலை விடயமாக வெளியூர் பயணங்கள் செல்வதை தவிர்ப்பது நன்மை கிட்டும். தொழிலில் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் செலவுகள் அதிகரிக்கும். செலவுகளை சமாளிக்க வேண்டிய நாள்.


kumbam

கும்பம்: நண்பர்கள், உறவினர்களிடம் உங்களின் மதிப்பு உயரும். நீங்கள் செய்யும் எந்தவொரு செயலிலும் உங்களின் மேன்னை மேலோங்கி காணப்படும். உத்யோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டை பெருவீர்கள். தொழிலில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் பலன் தரும். அந்தஸ்த்து உயரும் நல்ல நாள்.


meenam

மீனம்: முயன்றால் வெற்றி பெருவீர்கள். பொறாமை போட்டி அதிகரிக்கும். இன்று நீங்கள் பொருமையாக இருப்பது நல்லது. குடும்ப காரியங்களை பற்றி பிறரிடம் பேச வேண்டம். வேலையில் முயற்சி செய்தால் நன்மை கிடைக்கும். தொழிலில் வளர்ச்சி மந்தமாக இருக்கும். மனதை ஒருமுகப்படுத்துவதால் செயல் நல்ல விதமாக நிறைவேரும் நல்ல நாள்.