Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – புதன் 27/01/2016

இன்றைய ராசிபலன் – புதன் 27/01/2016

347
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 11.00 – 12.00  காலை – 7.30 – 9.00
மாலை – 4.30 – 5.30  மாலை – 12.00 – 1.30

சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்


mesaham

மேசம்: கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். சாதித்துக் காட்டும் நாள்.


rishabamரிஷபம்: தன் பலம் பலவீனத்தை உணருவீர்கள். சகோதர வகையில் பயனடைவீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்
கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.


mithunamமிதுனம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகார பதவியில் இருப்பவர்களாலும் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். வெற்றிப் பெறும் நாள்.


kadakamகடகம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.


simamசிம்மம்: இன்று உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னை புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.


kanni

கன்னி: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.


thulam

துலாம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து போகும்.
உறவினர், நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.


viruchigamவிருச்சிகம்: இன்று உங்களுக்கு பல வேலைகள் தடைப்பட்டு முடியும். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.


dhanusu

தனுசு: உங்கள் செயலில் வேகம் கூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.


magaram

மகரம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். தாயாருடன் மோதல்கள் வந்து நீங்கும்.  புது வேலை அமையும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.


kumbamகும்பம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நேர்மறை எண்ணம் பிறக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.


meenamமீனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வேற்றுமதத்தவர் உதவுவார்.  உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here