Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – புதன் 27/04/2016

இன்றைய ராசிபலன் – புதன் 27/04/2016

449
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 9.30 – 10.30  காலை – 7.30 – 9.00
மாலை – 5.15 – 6.00  மாலை – 12.00 – 1.30

சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீருஷம்


mesaham

மேசம்: நினைத்தது நிறைவேறும். பழைய உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சியால் முன்னேறும் நாள்.


rishabamரிஷபம்: சொன்ன சொல்லை காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடந்த காலத்தில் உங்களால் பயனடைந்தவர்கள் தற்சமயம் உங்களுக்கு உதவ வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.


mithunam

மிதுனம்: சாதித்துவிடுவோம் என்ற ஒரு நம்பிக்கை பிறக்கும். கூடாபழக்க வழக்கங்களிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ், கெரளவம் கூடும் உற்சாகமான நாள்.


kadakam

கடகம்: மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.


simam

சிம்மம்: இன்று நீங்கள் உங்களின் பலம் எது, பலவீனம் எது என்பதை உணர்ந்து செயல்படுவது நல்லது. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலைப் பொழுதிலிருந்து தடைகள் நீங்கும் நாள்.


kanni

கன்னி: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். உடல் அசதி, சோர்வு வந்து விலகும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிலும் பொறுமைத் தேவைப்படும் நாள்.


thulam

துலாம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். சிறப்பான நாள். 


viruchigam

விருச்சிகம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். வருமானம் உயரும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். விருந்தினர்களின் வருகை உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.


dhanusuதனுசு: இன்று நீங்கள் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுதான் காரணம் என்பதை உணருவீர்கள். உத்யோகத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.


magaramமகரம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். உடல் அசதி, சோர்வு வந்து விலகும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் ஆதரிப்பார்கள். ராசிக்குள் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.


kumbamகும்பம்: சாமர்த்தியமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.


meenamமீனம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்வீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் பழைய பங்குதாரரை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பாராத உதவிகள் கிட்டும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here