Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – புதன் 30/03/2016

இன்றைய ராசிபலன் – புதன் 30/03/2016

295
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 9.30 – 10.30  காலை – 7.30 – 9.00
மாலை – 3.30 – 4.30  மாலை – 12.00 – 1.30

சந்திராஷ்டமம்: ரோகிணி


mesahamமேசம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.


rishabamரிஷபம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புது முடிவுகள் எடுப்பீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.


mithunamமிதுனம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள். 


kadakamகடகம்: அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர பகை வரக்கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் அதிருப்தி உண்டாகும். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.


simamசிம்மம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகு, இளமைக் கூடும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில்  தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.


kanni

கன்னி: இன்று நீங்கள் எதையோ இழந்ததைப் போல் ஒருவிதகவலைகள் வந்து போகும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் உயரதிகாரியைப் பற்றி விமர்சிக்க வேண்டாம். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.


thulamதுலாம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.


viruchigamவிருச்சிகம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தைரியம் கூடும் நாள்.


dhanusuதனுசு: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.


magaramமகரம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். சொந்த-பந்தங்களுடன் மனத்தாங்கல் வரும். உடல் நலம் பாதிக்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.


kumbamகும்பம்: இன்று உங்களுக்கு வேலைச் சுமை இருந்துக் கொண்டேயிருப் பதாக ஆதங்கப்படுவீர்கள். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். சிறுசிறு ஏமாற்றங்கள் வந்து போகும். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.


meenamமீனம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.