Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – புதன் 30/12/2015

இன்றைய ராசிபலன் – புதன் 30/12/2015

302
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 9.15 – 10.15  காலை – 7.30 – 9.00
மாலை – 4.45 – 5.45  மாலை – 12.00 – 1.30

சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்


mesaham

மேசம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.


rishabamரிஷபம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்கள் கோரிக்கையை ஏற்பார். தைரியம் கூடும் நாள்.


mithunam

மிதுனம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

 


kadakam

கடகம்: இன்று நீங்கள் திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சமாளிப்பீர்கள். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப்பிடிப்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


simam

சிம்மம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். உங்களை தவறாக நினைத்துக் கொண்டிருந்தவர்களின் மனசு மாறும். வி.ஐ.பிகளின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். தொட்டது துலங்கும் நாள்.


kanniகன்னி: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சியால் முன்னேறும் நாள்.


thulamதுலாம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். இனிமையான நாள்.


viruchigamவிருச்சிகம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.


dhanusu

தனுசு: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித்தருவீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.


magaram

மகரம்: கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். எதிலும் பொறுமைத் தேவைப்படும் நாள்.


kumbam

கும்பம்: இன்று நீங்கள் எளிதாக முடிய வேண்டிய விஷயங்களை கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மற்றவர்களை விமர்சிக்க வேண்டாம். மாலைப் பொழுதிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.


meenam

மீனம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். மதிப்புக் கூடும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here