Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – புதன் 9/12/2015

இன்றைய ராசிபலன் – புதன் 9/12/2015

373
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 9.15 – 10.15  காலை – 7.30 – 9.00
மாலை – 4.45 – 5.45  மாலை – 12.00 – 1.30

சந்திராஷ்டமம்: ரேவதி, அசுபதி


mesahamமேசம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.


rishabamரிஷபம்: இன்று நீங்கள் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். அக்கம் -பக்கம் இருப்பவர்களை அனுசரித்து போங்கள். வியாபாரத்தில் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.

 


mithunamமிதுனம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டு அறிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நல்ல நாள்.


kadakamகடகம்: இன்று யாரிடமும் பொறுப்புகளை கொடுக்காமல் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள். 


simamசிம்மம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையை பெறுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


kanniகன்னி: எதிர்பாராத பண வரவு உண்டு. பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.


thulamதுலாம்: மறைமுக விமர்சனங்களும், எதிர்காலம் பற்றிய பயமும் வந்து நீங்கும். உறவினர்களால் சங்கடம் வரும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


viruchigamவிருச்சிகம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். குடும்ப சூழ்நிலை அறிந்து உங்கள் பிள்ளைகள் செயல் படுவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். மனசாட்சிப்படி செயல் படும் நாள்.


dhanusu

தனுசு: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வந்து நீங்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.


magaramமகரம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சியை அதிகாரி ஆதரிப்பர். நன்மை கிட்டும் நாள்.


kumbamகும்பம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்துக் கொள்வீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.


meenamமீனம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் நீங்கள் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் அனுபவம் மிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் ஆலோசனைகளை ஏற்பார்கள். தைரியம் கூடும் நாள்.