Home Tamil Cinema News விஜய் யேசுதாசுக்காக தனுஷ் பாடிய குத்துப் பாட்டு!

விஜய் யேசுதாசுக்காக தனுஷ் பாடிய குத்துப் பாட்டு!

71
SHARE

தனுஷ் நடித்த மாரி படத்தில் வில்லனாக அறிமுகமாகியவர் பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ். சினிமாவில் வில்லனாக தான் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் படைவீரன் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை மணிரத்தினத்திடம் துணை இயக்குநராக பணியாற்றி தனா என்பவர் இயக்கியுள்ளார். அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடிக்கிறார்.

பாரதிராஜா, மனோஜ்குமார், கவிதா பாரதி, கலையரசன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கார்த்திக் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்திற்கு தனுஷ் ஒரு பாடலை பாடி கொடுத்திருக்கிறார். லோக்கல் சரக்கா பாரின் சரக்கா என்ற குத்துப்பாட்டை தான் தனுஷ் பாடியுள்ளார். இப்படத்தை எவோக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் மதிவாணன் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here