Home Tamil Movie Reviews டார்லிங் 2 – விமர்சனம்

டார்லிங் 2 – விமர்சனம்

534
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

கடந்த வருடத்தில் வெளிவந்து ரசிகர்களின் மனதை கவர்ந்த படம் டார்லிங். இப்படத்தின் தொடர்ச்சி என்றில்லாமல் டைட்டிலை மட்டும் வைத்துக்கொண்டு வேறு ஒரு கதைக்களத்தில் ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் வந்திருக்கும் பேய் கதைப்படமே டார்லிங்-2.

3
இயக்கம்: சதீஷ் சந்திரசேகர்
ஒளிப்பதிவு: விஜய் கார்த்திக் கண்ணன்
இசை: ரதன்
தயாரிப்பு: ஞானவேல் ராஜா (ஸ்டூடியோ க்ரீன்)
நடிகர்கள்: கலையரசன், மெட்ராஸ் ஹரி, காளி வெங்கட், அர்ஜுனன், ‘முண்டாசுப்பட்டி’ முனீஸ் காந்த், ரமீஸ் ராஜா, மாயா

கடந்த வருடத்தில் வெளிவந்து ரசிகர்களின் மனதை கவர்ந்த படம் டார்லிங். இப்படத்தின் தொடர்ச்சி என்றில்லாமல் டைட்டிலை மட்டும் வைத்துக்கொண்டு வேறு ஒரு கதைக்களத்தில் ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் வந்திருக்கும் பேய் கதைப்படமே டார்லிங்-2.

darling-2-first-look-poster_144289575510

அறிமுக இயக்குனர் சதீஷ் சந்திரசேகர் இயக்கத்தில் கலையரசன், மெட்ராஸ் ஜானி, காளி வெங்கட் இவர்களுடைய நடிப்பில் இளம் டெக்னிஷியன்களின் கூட்டணியில் இந்த படம் வெளிவந்துள்ளது.

திருமணத்திற்கு முன் வேண்டா வெறுப்பாக பேச்சுலர் பார்ட்டிக்கு வால்பாறை செல்கிறார் கலையரசன். இவருடன் மெட்ராஸ் ஜானி, காளி வெங்கட், கிருஷ்ணா, அர்ஜுன் செல்கின்றனர். இந்த பேச்சுலர் பார்ட்டிக்கு முக்கிய காரணம் ரமீஷ்ஷின் தம்பி மரணம் தான். இவர்கள் கேங்கில் ஒருவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்துக்கொள்கிறார். இதனால் சோகத்தில் இருக்கும் புதுமாப்பிள்ளை கலையரசன் மனதை மாற்ற பேச்சுலட் ட்ரிப் அடிக்கிறார்கள்.

Darling-2-movie-stills-1-1

வால்பாறை கெஸ்ட் அவுஸ் சென்றவுடன் ஒரு ஆவியின் ஆட்டம் ஆரம்பிக்கின்றது. அர்ஜுன், காளி வெங்கட், ஜானி என அனைவரையும் அச்சத்தில் உறைய வைக்கின்றது. ஒரு கட்டத்தில் தங்கள் நண்பன் கலையரசன் மீது ஆவி இருப்பது தெரிய வருகின்றது.

அந்த ஆவியிடம் நீ யார் என்று கேட்க, நான் தான் உங்கள் நண்பன் ராம்(ரமீஷின் தம்பி) அரவிந்தால்(கலையரசன்) தான் நான் இறந்தேன், எனக்கு அவன் உயிர் வேண்டும் என கேட்கின்றது. கலையரசனை ஏன் பழி வாங்க வேண்டும் இவர் மரணத்திற்கு அவர் எப்படி காரணம், பேய் கலையரசனை சொன்னது போல் பழி வாங்கியதா என்பதே மீதிக்கதை.

darling-2-87965

நண்பர்களில் அரவிந்த்தாக ‘மெட்ராஸ்’ கலையரசன், ராம் மற்றும் கிருஷ்ணனாக டபுள் ரோலில் வரும் ரமீஸ், ரபியாக வரும் காளி வெங்கட், பாலாஜி – ‘ஜானி” ஹரி, வால்பாறை வரதன் – முனிஸ்காந்த், அர்ஜூனன் – சங்கர் உள்ளிட்ட நண்பர்களும், நடிகர்களும் இயக்குனர் எதிர் பார்த்ததை சிற்பபாக செய்திருக்கின்றனர்.

நாயகி ஆயிஷாவாக மாயா, பேயாகவும், பெண்ணாகவும், பயமுறுத்தவில்லை, பாசம் காட்டி நடித்திருக்கிறார். இவரும், வால்பாறை வரதன் ஜெயம்.. ன்னு, நாற்பது பக்கம் நோட்டில் எழுதினா பயம் போயிடும்… எனும் வரதன் – முனிஸ்காந்தும் இப்படத்திற்கு பெரும் பலம்.

darling-2_145931491110

மதனின் கத்தரி தன்வேலையை கச்சிதமாக செய்திருக்கிறது. கல்யாணம் பண்ணிட்டா பேய் பயம் போவாது, பழகிடும்…, மச்சான், தான் நினைச்சதை எல்லாம் ஒருத்தன் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கிறானா, அவன் பைத்தியம் அல்லது பேச்சுலரா இருக்கணும், என்பது உள்ளிட்ட டயலாக்கு களும் சுதைப்படி, இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த நாயகியை பார்த்து ராம், பொட்டும் பூவும் வச்சா இன்னும் அழகா இருப்பாய்… இதை நான் ராமா சொல்லலை ரசிகனா சொல்றேன்.. எனும் டயலாக்குகள் எல்லாம் ராதாகிருஷ்ணனின் எழுத்தில் ஹாஸ்யம், சுவாரஸ்யம்!

விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு ஒளிரும் ஓவியபதிவு பேய் பயமுறுத்தல் காட்சிகளில் ஒவர் ஆட்டம் போட்டிருப்பது ரசிகனை மிரள செய்கிறது. நேசா கரிசா நிப மா, சொல்லட்டுமா ஒன்று சொல்லட்டுமா. ”காற்றில் வருவேன்”., ‘வா உளறவா, உள்ளிட்ட பாடல்கள் ரதனின் இசையில் ரசனை. ஆனால் பின்னணி இசை பேயை விட அதிகம் பயமுறுத்துவது கொடுமை!

மொத்தத்தில் ”டார்லிங் 2″ – ரசிகனை மிரள செய்கிறது.

டார்லிங் 2 – விமர்சனம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here