Home Tamil Breaking News பாஜகவுடன் கூட்டணி குறித்து உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் முடிவு: முதல்வர் பழனிசாமி

பாஜகவுடன் கூட்டணி குறித்து உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் முடிவு: முதல்வர் பழனிசாமி

18

பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து தமிழக உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் முடிவு பரிசீலிக்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் சின்னையன் சத்திரத்தில் செய்தியாளர்கள் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். பாஜகவுடன் கூட்டனி அமைக்க சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் முடிவு பரிசீலிக்கப்படும்” என்றார்.

முன்னதக நேற்று (வெள்ளிக்கிழமை) பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “தேர்தல் நேரத்தில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் எந்தத் தவறுமில்லை. கூட்டணி குறித்து முதல்வரும், துணை முதல்வரும் முடிவெடுப்பார்கள்.

இந்தியாவை வல்லரசாக உயர்த்தவே பிரதமர் மோடி போராடி வருகிறார். அவரை ஏன் குறுகிய மனப்பான்மையோடு பார்க்க வேண்டும்? பாஜக ஏதும் தவறு செய்யவில்லையே. நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்கெனவே நாங்கள் (அதிமுக) பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். ஏன் திமுககூட தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்ததே? இப்போது என்னவோ பாஜக கசப்பதாக திமுக கூறுகிறது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று முதல்வர் பழனிசாமியும் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேசியிருக்கிறார்.

உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் பாஜகவுடன் கூட்டணி குறித்து அதிமுகவினர் மவுனம் கலைத்து வருவது அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here