Home Tamil Cinema News பிகா படுகோனே தனது சம்பளத்தை ரூ.15 கோடியாக உயர்த்தியுள்ளார்

பிகா படுகோனே தனது சம்பளத்தை ரூ.15 கோடியாக உயர்த்தியுள்ளார்

150

deepika_padukone_hot_in_race_2-1440x900

பாஜிராவ் மஸ்தானி படம் ஹிட்டானதை அடுத்து பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார். இதுவரை ரூ.10 கோடி வாங்கிய அவர் இனி ரூ.15 கோடி அளித்தால் மட்டுமே நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு அவர் நடிப்பில் பிக்கு, தமாஷா, பாஜிராவ் மஸ்தானி ஆகிய மூன்று படங்கள் வெளியாகின. அதில் தமாஷா மட்டும் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. மற்ற இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டானது.

பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர் தீபிகா. அவர் சம்பளத்தை அதிகரித்துள்ளபோதிலும் அவரை தங்களின் படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்கள் வரிசைகட்டி நிற்கிறார்கள். தீபிகாவுக்கு இருக்கும் மவுசு இந்த வருடமும் குறையாது என்றுதான் பாலிவுட் வட்டாரங்களிலும் பேசப்படுகிறது.