‘XXX தி ரிட்டர்ன் ஆப் சான்டர் கேஜ்’ பட போஸ்டரை பகிர்ந்த தீபிகா படுகோனே

‘XXX தி ரிட்டர்ன் ஆப் சான்டர் கேஜ்’ பட போஸ்டரை பகிர்ந்த தீபிகா படுகோனே

101

Deepika Padukone Shares Latest Still from xXx Movie

தீபிகா படுகோனே நடித்திருக்கும் முதல் ஹாலிவுட் படம் ‘XXX: தி ரிட்டர்ன் ஆப் சான்டர் கேஜ்’. இதில் இவர் ஹாலிவுட் நடிகர் வின் டீசலுடன் இணைந்து நடித்துள்ளார். பாலிவுட்டின் வெற்றி நாயகியாக வலம்வந்த தீபிகாவுக்கு கடந்த வருடம் ஹாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

இதனால் பிரியங்கா சோப்ராவைத் தொடர்ந்து ஹாலிவுட் சென்ற நடிகை என்ற புகழும் இவருக்குக் கிடைத்தது. வின் டீசல், ஜெட்லி, டோனிஜாவுடன் இணைந்து தீபிகா படுகோனே நடித்திருக்கும் இப்படத்துக்கு இந்திய ரசிகர்கள் மத்தியிலும் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

இந்த நிலையில் முதன்முறையாக இப்படத்தின் போஸ்டர் ஒன்றை தீபிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில் ‘நான் நல்லவர்களை நம்புவதில்லை’ என்னும் வசனத்துடன் தீபிகா பகிர்ந்து கொண்டிருக்கும் புகைப்படம் வலைத்தளத்தை கலக்கி வருகிறது.

#look #SerenaUnger #XxX:TheReturnOfXanderCage

A photo posted by Deepika Padukone (@deepikapadukone) on

NO COMMENTS

LEAVE A REPLY