Home Tamil Cinema News வின் டீசலுடன் ஹாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கும் தீபிகா படுகோனே!

வின் டீசலுடன் ஹாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கும் தீபிகா படுகோனே!

139

vin-deepika

பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே 100 கோடிக்கு மேல் வசூல்களை குவித்த பல வெற்றிப் படங்களில் நடித்தவர். இவர் தற்சமயம் நடித்து வெளியான தமாஷா படமும் ஹிந்தியில் சக்கைப்போடு போட்டு வருகின்றது.

இந்நிலையில் ஹாலிவுட்டின் ஆக்‌ஷன் ஸ்டாரான வின் டீசலுடன் ஹாலிவுட் படமொன்றில் தீபிகா நடிக்க உள்ளார் என்கின்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தயும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தமாஷா படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு பிறகு அமெரிக்காவிற்கு சென்றுள்ள தீபிகா அங்கு வின்னை சந்தித்துள்ளார். இந்நிலையில் அவருடன் நடிக்க இருக்கும் படத்தின் பேச்சுவார்த்தைக்குதான் தீபிகா அங்கு சென்றார் என்று செய்திகள் பாலிவுட் திரையுலகில் பரவி வருகின்றன.

மேலும், இதை உறுதிப் படுத்தும் வகையில் தீபிகாவும், வின் டீசலும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படமும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. அந்த போட்டோவினை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தீபிகா இதுகுறித்து இன்னும் உறுதிபடுத்தவில்லை.