Home Tamil Cinema News மஜ்தார் படத்தில் சல்மான் கானுடன் நடிக்க கன்டிசன் போட்ட தீபிகா!

மஜ்தார் படத்தில் சல்மான் கானுடன் நடிக்க கன்டிசன் போட்ட தீபிகா!

118

deepika-padukone

பாலிவுட்டின் வெற்றி நாயகியாக இருந்து வரும் தீபிகா தற்போது வின் டீசலிலுடன் XXX தி ரிட்டர்ன் ஆப் சான்டர் கேஜ் என்னும் ஹாலிவுட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இது தான் தீபிகா நடிக்கும் முதல் ஹாலிவுட் படம். மேலும் இந்தியில் கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான் நடித்த பஜ்ரங்கி பாய்ஜான் படம் சூப்பர் ஹிட்டானது. இந்த நிலையில் கபீரும், சல்மானும் சேர்ந்து மீண்டும் பணியாற்ற உள்ளனர்.

அந்த படத்திற்கு மஜ்தார் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மஜ்தார் படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்குமாறு இயக்குனர் கபீர் தீபிகா படுகோனேவிடம் கேட்டுள்ளார்.

சல்மான் கானுடன் நடிக்கிறேன். ஆனால் படத்தில் என் கதாபாத்திரம் வெயிட்டாக இருக்க வேண்டும். சும்மா வந்து தலையை காட்டிவிட்டு மரத்தை சுற்றி சுற்றி வந்து பாடி, ஆடுவதோடு முடிந்துவிடக் கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளாராம் தீபிகா.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here