Home Tamil Cinema News இந்த முறையும் விருது கிடைக்காததால் சோகத்தில் தீபிகா படுகோனே

இந்த முறையும் விருது கிடைக்காததால் சோகத்தில் தீபிகா படுகோனே

119

deepiak-padukone

இந்த ஆண்டிற்கான 63 வது தேசிய விருதுகள் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் விசாரணை, பாகுபலி போன்ற தென்னிந்தியப் படங்கள் விருதுகளை வென்றன. இதில் மொத்தம் 5 தேசிய விருதுகளை தமிழ் சினிமா கைப்பற்றியது.

இதில் சிறந்த நாயகிக்கான தேசிய விருதை கங்கனா ரனாவத் நடித்த தனு வெட்ஸ் மனு என்ற படத்திற்காக வென்றனர். இந்த நிலையில் இந்தி நடிகையான தீபிகா படுகோனே, தேசிய விருதுகளால் ரொம்பவே வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்தாண்டு வெளியான பிக்கு மற்றும் பாஜிராவ் மஸ்தானி 2 படங்களிலும் தீபிகா படுகோனே நன்றாக நடித்திருந்தார். விமர்சனம் மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் இப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன.

மேலும், பல்வேறு விருதுகளையும் இப்படங்கள் வாங்கிக் குவித்தன. இதனால் இந்த வருடம் தனக்கு தேசிய விருது கிடைக்கும் என்று தீபிகா ஆவலுடன் காத்திருந்தார். ஆனால் சிறந்த நடிகைக்கான விருதை 2 வது முறையாக கங்கனா ரனாவத்திற்கே கொடுத்து விட்டனர்.

இதுதான் தீபிகாவின் மனவருத்தத்திற்கு காரணமாம். தீபிகா நடிப்பில் வெளியான பிக்கு, பாஜிராவ் மஸ்தானி இரண்டு படங்களுக்குமே தேசிய விருது கிடைத்திருக்கிறது, ஆனால் இவருக்குதான் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.