Home Tamil Cinema News ரஜினியின் ‘எந்திரன்-2’ படத்திற்கான அறிவிப்பு பற்றிய தகவல்கள்

ரஜினியின் ‘எந்திரன்-2’ படத்திற்கான அறிவிப்பு பற்றிய தகவல்கள்

808

774521225

எந்திரன்-2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி வரும் எனவும், இப்படம் கிட்டத்தட்ட ரூ 250 கோடி செலவில் எடுக்கப்போவதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் 2010ம் ஆண்டு திரைக்கு வந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் எந்திரன். இப்படத்தின் தொடர் பாகமாக இரண்டாவது பாகத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் ஷங்கர் உள்ளார்.

இதில் ரஜினிகாந்த் மட்டுமின்றி ஹாலிவுட் நடிகர் அர்னால்ட்டும் நடிக்கவுள்ளார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கின்றது. ஷங்கரின் இந்த பிரம்மாண்ட படைப்பு அவரது முந்தய படங்களை விட பிரம்மாண்டமாக வெர்றிபெரும் என்று நம்பலாம்.