Home Tamil Cinema News அரசியல்வாதியாக நடிக்கவிருக்கும் தனுஷ்

அரசியல்வாதியாக நடிக்கவிருக்கும் தனுஷ்

138

h

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்துக்கு ‘கொடி’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. துரை செந்தில்குமார் எதிர்நீச்சல், காக்கி சட்டை ஆகிய படங்களை இயக்கியவர் ஆவார். இந்தப் படத்தில் தனுஷ் அரசியல்வாதியாக நடிப்பதால், இந்த பெயர் சூட்டப்பட்டு இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

இதில், தனுஷ் ஜோடிகளாக திரிஷா, ஷாம்லி ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். இருவரும் தனுசுடன் ஜோடியாக நடிக்கும் முதல் படம் இது. இயக்குனர் வெற்றிமாறன் இந்தப் படத்தினை தயாரிக்கிறார்.

படப்பிடிப்பு கடந்த நவம்பர் மாத இறுதியில் நடைபெறுவதாக இருந்தது. தமிழக வெள்ள சேதத்தால் இதன் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது. மீண்டும் சில நாட்களில் கோவை மற்றும் சுற்றுவட்டாரங்களில் விரைவில் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.