Home Tamil Cinema News தனுஷுக்கும் அனிருத்துக்கும் முற்றிய சண்டை!

தனுஷுக்கும் அனிருத்துக்கும் முற்றிய சண்டை!

140

Dhanush-and-Anirudh-Fight

இசையமைப்பாளர் அனிருத் தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே தனது திறமையால் நல்ல இடத்தை பிடித்தார். அவரது வளர்ச்சியில் நடிகர் தனுஷுக்கு பெரும் பங்கு உள்ளது. அனிருத் கிடைத்த வாய்ப்புகள் யாவையும் விடாமல் அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டார்.

அதனால் அனிருத் விஜய், அஜித் படங்கள் வரை இசையமைக்க ஆரம்பித்து விட்டார். இருப்பினும் சிம்பு பாடிய பீப் பாடலால் அனிருத்தின் இசை பயணத்தில் சிறு சருக்கல் ஏற்பட்டது. அதனால் பல படங்களில் இருந்து அவர் விலக்கப்பட்டார். தனுஷும் தன் பங்குக்கு தனது அடுத்தடுத்த படங்களில் இருந்து அனிருத்தை விலக்கிவிட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் தனுஷின் விஐபி படத்தின் அவரின் தம்பியாக நடித்த ரிஷிகேஷ் ரம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

இதற்காக வாழ்த்து தெரிவித்த தனுஷ், அதில் அனிருத் என்ற பெயரை குறிப்பிடவே இல்லை, இது பெரிய விஷயம் இல்லை என்றாலும், சமீபத்தில் அனிருத் ‘கெத்த விடாத பங்கு கெத்த விடாத’ என தன் டுவிட்டரில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர்கள் இனி இணைவது மிகவும் சிரமம் தான் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.