Home Tamil Cinema News தனுஷ் – அனிருத் கூட்டணி உடைந்தது

தனுஷ் – அனிருத் கூட்டணி உடைந்தது

168

5MP_DHANUSH1_2299890g

தமிழ் திரையுலகில் சமீபகாலமாக வெற்றிக் கூட்டணியாக வலம் வந்தவர்கள் தனுஷ், அனிருத். இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளிவரும் படங்கள் தற்போது வரை வெற்றி படமாகவே வருகின்றது. தற்போது தனுஷ் அடுத்து கொடி என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை காக்கிசட்டை, எதிர் நீச்சல் இயக்குனர் துரை செந்தில் இயக்கவுள்ளார்.

இவரின் கடந்த இரண்டு படங்களுக்கும் அனிருத் தான் இசையமைப்பாளர், மேலும், தனுஷின் விரும்பத்தக்க இசையமைப்பாளர் அனிருத் தான்.

பீப் பாடல் சர்ச்சையால் இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக சில நாட்களாக மீடியாக்களில் செய்தி வந்து கொண்டிருக்கிறது, அதை நிரூபிக்கும் வகையில் கொடி படத்திற்கு அனிருத்தை கழட்டிவிட்டு, சந்தோஷ நாரயணனை இசையமைப்பாளராக கமிட் செய்து விட்டது படக்குழு.

ஆனால் அனிருத் அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை. அவர் தற்போது வெளிநாட்டில் பரபரப்பாக தன் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.