Home Tamil Cinema News ஹாலிவுட் படத்தில் நடிப்பதால் உற்சாகத்தில் இருக்கும் தனுஷ்

ஹாலிவுட் படத்தில் நடிப்பதால் உற்சாகத்தில் இருக்கும் தனுஷ்

122

5MP_DHANUSH1_2299890g

நடிகர் தனுஷுக்கு ஹாலிவுட்டில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் தனுஷ் முதன் முதலாக ஹாலிவுட்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறார்.

ஈரானிய-பிரெஞ்ச் இயக்குனரான மரியான் சத்ராபி இயக்கும் புதிய ஹாலிவுட் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளார். மரியான் சத்ராபி ஏற்கெனவே பிரெஞ்சு மொழியில் பெர்சிபொலிஸ் என்ற படத்தை இயக்கியவர்.

தனுஷ் ஹீரோவாக நடிக்கும் அந்த படத்தில் சான் ஆண்ட்ரியாஸ் படத்தின் நாயகி அலெக்ஸாண்ட்ரா தத்தாரியோ மற்றும் உமா தர்மன் ஆகியோரும் நடிக்கவிருக்கிறார்கள். ஆங்கில காமிக் நாவலை தழுவி இப்படம் தயாராக உள்ளது. இப்படத்தில் தனுஷ் இந்திய மந்திரவாதியாக நடிக்கிறாராம்.

ஹாலிவுட் படத்தில் நடிப்பது குறித்து தனுஷ் கூறும்போது, முழு நீள ஹாலிவுட் படத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தந்துள்ளது.

நான் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது சரியாக இருக்கும் என்பது இயக்குநர் மர்ஜோன் சத்ராபி அவர்களின் கணிப்பு. இப்படம்  என்னிடமிருந்து வெவ்வேறு விதமான அமசங்கள்கொண்ட கதாபாத்திரங்களை வெளிக்கொண்டு வரும் ஓர் பயணமாக இருக்கும் என்று நான் நினைக்கிறன் என்று கூறினார்.