Home Tamil Cinema News விஐபி 3 நிச்சயம் உண்டு.. ஆனா டைரக்ஷன் மட்டும்…! – தனுஷ் இயக்குநர் யார்?...

விஐபி 3 நிச்சயம் உண்டு.. ஆனா டைரக்ஷன் மட்டும்…! – தனுஷ் இயக்குநர் யார்? அந்தப் படத்துக்கு இயக்குநர் யார் என்பதை இப்போதே சொல்ல முடியாது. நான் இயக்குவேனா என்பதும் தெரியாது.

32

விமர்சனங்கள் முன்னே பின்னே இருந்தாலும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. சாதாரண வெற்றி இல்லை… இந்தியா முழுவதும் இந்தப் படத்துக்கு அமோக வரவேற்பு.

தமிழில் மட்டும் கிட்டத்தட்ட 50 கோடியை நெருங்கிவிட்டது வசூல். இந்த வெற்றி சௌந்தர்யாவுக்குதான் மிக முக்கியம். விஐபி 2 அவருக்கு இரண்டாவது படம் என்றாலும், லைவ் ஆக்ஷன் என்ற வகையில் முதல் படம். வணிக ரீதியாக இவ்வளவு பெரிய வெற்றியை திரையுலகமே கூட எதிர்ப்பார்க்கவில்லை. அந்த உற்சாகத்தில் விஐபி 3 நிச்சயம் உண்டு என்கிறார் தனுஷ்.

விஐபி 3: “விஐபி 3 நிச்சயம் உண்டு. ஆனால் எப்போது என்பதை இப்போதே சொல்ல முடியாது. அடுத்து 3 படங்கள் உள்ளன. அதற்குப் பிறகோ, முன்போ விஐபி 3 அறிவித்துவிடுவேன்.”

இயக்குநர் யார்?: அந்தப் படத்துக்கு இயக்குநர் யார் என்பதை இப்போதே சொல்ல முடியாது. நான் இயக்குவேனா என்பதும் தெரியாது.

விமர்சனங்களை எதிர்ப்பார்த்தேன்: படத்துக்கான எதிர்மறை விமர்சனங்களை நான் எதிர்ப்பார்த்தே இந்தப் படம் செய்தேன். ஆனால் அதற்காக வருத்தப்படவில்லை. இந்தப் படம் அன்பைச் சொல்கிறது. பாஸிடிவாக முடிகிறது. அதுதான் இந்த வெற்றியைத் தந்திருக்கிறது.

அன்பை பரப்புங்கள்: “இந்த உலகுக்கு இப்போதைய தேவை அன்புதான். எவ்வளவு முடியுமோ அவ்வளவு அன்பைப் பரப்புங்கள். அதுதான் இந்த உலகைக் காப்பாற்றும். எதிர்ப்புகள், வெறுப்புகள் குறித்து கவலைப்படத் தேவையில்லை. என் அடுத்தடுத்த படங்களும் பாஸிடிவாக இருக்கும்படி பார்த்துக் கொள்வேன்,” என்கிறார் தனுஷ்.