Home Tamil Cinema News தனுஷ், ஜீவா, விஜய்சேதுபதி இணைந்து நடிக்கும் வட சென்னை

தனுஷ், ஜீவா, விஜய்சேதுபதி இணைந்து நடிக்கும் வட சென்னை

155

Dhanush-Jeeva.-Vijay-Sethupathi

நடிகர் தனுஷ் தற்போது பிரபு சாலமன் இயக்கும் புதிய படத்தில் நடித்துக் கொண்டு உள்ளார். இப்படத்தை அடுத்து இயக்குனர் வெற்றி அடுத்து ‘வட சென்னை’ படம் இயக்குகிறார். அதில் தனுஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளார். அடுத்த ஆண்டு முதல் இதன் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளார்.

இப்படம் முழுக்க முழுக்க வடசென்னையை மையமாக வைத்து உருவாக்கபட உள்ளது. இப்படத்தில் பிரபல ஹீரோகளை சேர்த்து நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

அதன்படி,இப்படத்தில் ஜீவா மற்றும் விஜய் சேதுபதி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கோடம்பாக்கம் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது. ஜீவா தற்போது 2 படங்களில் நடித்து வருவதால் தனுஷ் படத்துக்கு கால்ஷீட் ஒதுக்குவதுபற்றி யோசித்து வருகிறார். படப்பிடிப்பு தினம் குறிக்கப்பட்டவுடன் இதில் நடிப்பதா இல்லையா என்பது தெரிவிப்பதாக ஜீவா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் விஜய் சேதுபதியிடமும் இப்படத்தில் நடிப்பதற்காக கேட்டிருக்கிறார் வெற்றி மாறன். அவரும் நடிக்க சம்மதித்தால் வட சென்னை படம் 3 ஹீரோக்கள் கதையாக உருவாகும் என்று தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here