பீட்டா அமைப்பு சிறப்பித்ததை அவமானமாக கருதும் தனுஷ்

பீட்டா அமைப்பு சிறப்பித்ததை அவமானமாக கருதும் தனுஷ்

24

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டும், பீட்டா அமைப்பை இந்தியாவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக நடிகர் தனுஷ் கூறுகையில், தான் பீட்டா அமைப்பில் இல்லை என்று திட்டட்டமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து சமவெளி நாகரீகத்தில் காளையும் மனிதனும் இணைந்தே உழைத்ததை அறிய முடிகிறது. இதை உணர்ந்துதான் இந்திய அரசு முத்திரையில் காளையை இடம்பெற செய்திருக்கிறது. உலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் ஆடு, மாடுகளை கால்நடைச்செல்வம் என்றழைத்தது.

மாடு போல் உழைப்பான் தமிழன். மாட்டுக்காகவும் உழைப்பான் தமிழன். எந்த அரசியல் தலைவவர்களின் வழிகாட்டுதல் இல்லாமல், கொடி இல்லாமல், சாதி, மத வேறுபாடு இல்லாமல் தமிழ்நாட்டு மக்கள் என்ற ஒரே உணர்வோடு மிகவும் கண்ணியமாகவும் கட்டுக்கோப்போடும் நடத்தும் அறவழிப் போராட்டத்தை பார்த்து வியந்து தலைவணங்குகிறேன்.

முன்பு பீட்டா அமைப்பு சைவ உணவு சாப்பிடுகிறவன் என்ற முறையில் என்னை சிறப்பித்தது. இப்போது அதை பெரும் அவமானமாக கருதுகிறேன். அதற்காக மிகவும் வருந்துகிறேன். நானோ எனது குடும்பத்தாரோ யாரும் பீட்டா அமைப்பில் உறுப்பினராக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY