தனுஷ் இரட்டை வேடங்களில் வரும் ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’

தனுஷ் இரட்டை வேடங்களில் வரும் ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’

98

ENPT-first-look

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தனுஷுடன் இணைந்து ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’ படத்தின் வேலைகளை ஆரம்பித்துவிட்டார். தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே துருக்கியில் பாடல் காட்சி ஒன்றை படமாக்கிவிட்டுத் திரும்பியிருக்கிறார் கௌதம்.

தற்போது இப்படம் பற்றிய மேலும் சில தகவல்கள் வெளிவந்துள்ளன. அதில் ஆங்காங்கே முக்கிய நட்சத்திரம் ஒன்றின் ‘வாய்ஸ் ஓவர்’ ஒலித்துக்கொண்டே இருக்கும். ஆனால், இந்த ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’வைப் பொறுத்தவரை மொத்த படம் வாய்ஸ் ஓவரை மையமாக வைத்து நகரும்படிதான் திரைக்கதை அமைத்திருக்கிறாராம்.

முதல் பாதியில் லவ், இரண்டாம் பாதியில் ஆக்ஷன் என நகரும் இந்தப் படத்தில் நாயகி மேகா ஆகாஷிற்கு சினிமா ஹீரோயின் கேரக்டராம். இந்தப் படத்தில் தனுஷிற்கு இரண்டு ‘லுக்’ கொடுத்திருக்கிறார் கௌதம். ஒன்று, ஸ்மார்ட்டான சாக்லேட் பாய் லுக்.

மற்றொன்றிற்காக இதுவரை தனுஷ் தோன்றாத புதுவித கெட்அப்பில் இருப்பார் என்கிறார்கள். ஜோமன் டி.ஜான் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY