Home Tamil Cinema News தீபாவளி பந்தயத்தில் இணையும் தனுஷின் கொடி

தீபாவளி பந்தயத்தில் இணையும் தனுஷின் கொடி

83

CYCw5cPUoAEudow

தனுஷ், த்ரிஷா, பிரேமம் புகழ் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ள படம் கொடி. இதனை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். தனுஷ், த்ரிஷா முதல் முறையாக இப்படத்தில் ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளனர்.

இந்த படம் அரசியல் ப்ளஸ் த்ரில்லராக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதுவும் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். தனுஷின் கொடி தீபாவளி (அக்டோபர் மாதம் 29ம் தேதி) அன்று வெளியாக உள்ளது. இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

முன்னதாக தீபாவளி பந்தயத்தில் கமல் ஹாஸனின் விஸ்வரூபம் 2, கார்த்தியின் காஷ்மோரா, விக்ரம் பிரபுவின் வீர சிவாஜி ஆகிய படங்கள் உள்ளன. இந்த நிலையில் அதில் கொடியும் சேர்ந்துள்ளது. தீபாவளிக்கு தனுஷ் படம் வெளியாக உள்ளதால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.