Home Tamil Cinema News ‘தனுஷ்’ நடிக்கும் வட சென்னை படம் 2016ல் ரிலீஸ்

‘தனுஷ்’ நடிக்கும் வட சென்னை படம் 2016ல் ரிலீஸ்

147

dhanush

பொல்லாதவன், ஆடுகளத்தில் இணைந்து வெற்றியை கொடுத்த தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணி இணைந்து மீண்டும் படம் பண்ண திட்டமிட்டு இருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு தனுஷ், பார்த்திபன் உள்ளிட்டவர்களை வைத்து சில காட்சிகளை காட்சிப்படுத்தினார் வெற்றிமாறன்.

இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு முன்னர் சிம்புவை நாயகனாக வைத்து இயக்கவிருந்த ‘வட சென்னை’ படத்தில் சிம்புவை கைவிட்டு தற்போது தனுஷை வைத்து மீண்டும் துவங்க இருக்கிறார் வெற்றிமாறன். சமந்தா நாயகியாக நடிக்கவிருக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருக்கிறார்.

dhanush-samantha

இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுத்து வெளியிட திட்டமிட்டு இருக்கிறார் வெற்றிமாறன். தனுஷை இதுவரை கண்டிராத பாத்திரத்தில் காட்ட இருக்கிறார்களாம். இப்படத்தின் படப்பிடிப்புக்கு நீண்ட நாட்களாகும் என்பதால் பிரபுசாலமன் மற்றும் துரை.செந்தில்குமார் ஆகியோரது படங்களை முடித்துவிட்டு வெற்றிமாறன் படத்தில் முழு கவனம் செலுத்த திட்டமிட்டு இருக்கிறார் தனுஷ்.

வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்து தயாரிக்கவிருக்கும் இந்த வட சென்னை திரைப்படமும் வெற்றி அடையும் என ரசிகைகளால் எதிர்பார்க்கப்படுகிறது