Home Tamil Cinema News தனுஷின் தங்கமகன் டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது

தனுஷின் தங்கமகன் டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது

125

Dhanush-in-Thanga-Magan

தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன், கே.எஸ்.ரவிக்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தங்கமகன். வேலை இல்லாப் பட்டதாரி படத்தின் 2 வது பாகமாக தங்கமகன் உருவாகி இருக்கிறது. இப்படத்தை வருகின்ற 18ம் தேதி படக்குழுவினர் வெளியிடுகின்றனர்.

மேலும் இப்படத்தின் டிரெய்லரை இன்று மாலை 6 மணியளவில் வெளியிடுவதாக நடிகர் தனுஷ் அறிவித்திருக்கிறார். மழை, வெள்ளம் காரணமாக நிறையப் படங்கள் தள்ளிப்போன நிலையில் சொன்ன தேதியில் தமிழ், தெலுங்கு மொழிகளில் படத்தை வெளியிடுகிறார் தனுஷ்.

தெலுங்கில் இப்படம் நவ மன்மதடு என்ற பெயரில் டப் செய்யப்பட்டு சுமார் 300க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழில் இப்படத்தை 400 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடுகின்றனர்.