Home Tamil Cinema News ஜாக்கி சானுடன் நடிக்கப்போகும் தனுஷ் பட நாயகி

ஜாக்கி சானுடன் நடிக்கப்போகும் தனுஷ் பட நாயகி

175

amyra-jackie-chan

உலகப் புகழ் பெற்ற ஆக்ஷன் ஹீரோ ஜாக்கி சானுடன் நடிக்க இந்திய ஹீரோயினுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இவருடன் நடிக்க பலபேர் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அந்த அதிர்ஸ்டம் சுலபமாக யாருக்கும் கிடைத்துவிடுவதில்லை.

இந்த நிலையில் ஜாக்கி சான் நடிக்க இருக்கும் Kung Fu Yoga என்ற படத்தில் நடிக்க அனேகன் பட நாயகி அமைரா தஸ்துருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. விரைவில் படத்திற்கான வேலைகள் துவங்கவுள்ளது.

ஆங்கிலம், ஹிந்தி, மண்டரின் என மூன்று மொழிகளிலும் தயாராகும் இந்த படத்தை ஸ்டான்லி டாங் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் சோனு சூத் மற்றும் இலியானாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அமைரா தஸ்துரு இந்த படத்தில் ஜாக்கி சானுடன் சண்டையிடும் காட்சிகளும் படம் பிடிக்கப்பட்டிருக்காம்.