Home Tamil Cinema News தங்கமகன் கதை குறித்து தனுஷ் விளக்கம்!

தங்கமகன் கதை குறித்து தனுஷ் விளக்கம்!

169

dhanush

வேலையில்ல பட்டதாரி படத்தின் மாபெரும் வெற்றிக்கு மீண்டும் அதே கூட்டணியில் வெளிவரவுள்ள படம் தங்கமகன். கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற வேலை இல்லாப் பட்டதாரி படத்தின் 2 வது பாகமாக தங்கமகன் உருவாகிவருகிறது என்று தமிழ் திரையுலகில் பேசப்பட்டது.

இந்நிலையில் தனுஷ் இப்படத்துக்கும் வேலையில்ல பட்டதாரி படத்துக்கும் எந்த வித சமந்தமும் இல்லை. இது முற்றிலும் புது கதை என்றார்.

மழை, வெள்ளம் காரணமாக நிறையப் படங்கள் தள்ளிப்போன நிலையில் வருகிற 18ம் தேதியில் தமிழ், தெலுங்கு மொழிகளில் படத்தை வெளியிடுகிறார் தனுஷ். தெலுங்கு பதிப்பும் அதே நாளில் வெளியிட முடிவு செய்துள்ளார் தனுஷ். தெலுங்கு மக்களிடம் விஐபி க்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இந்த முடிவை எடுத்து உள்ளாராம்.