Home Tamil Cinema News தனுஷ் ‘அம்மா கணக்கு’ என்ற பெயரில் புதிய படத்தை தயாரிக்கிறார்

தனுஷ் ‘அம்மா கணக்கு’ என்ற பெயரில் புதிய படத்தை தயாரிக்கிறார்

97

Amma Kanakku

தனுஷ் சொந்தமாக ‘வுண்டார்பார் பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்த அனைத்து படங்களும் வசூலிலும், ரசிகர்கள் மத்தியிலும் பலத்த வெற்றியை தேடித்தந்துள்ளது.

சென்ற வருடம் இவருடைய தயாரிப்பில் வெளிவந்த ‘காக்கா முட்டை’, ‘நானும் ரௌடிதான்’, ‘தங்கமகன்’ ஆகிய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த வருடத்தில் தனது நிறுவனத்தின் முதல் கணக்காக பெண் இயக்குநர் அஸ்வினி திவாரியின் ‘அம்மா கணக்கு’ என்ற பெயரில் புதிய படத்தை தயாரிக்கிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முதல் தொடங்குகிறது. சமுத்திரக்கனி, அமலா பால், ரேவதி போன்றோர் நடிக்கும் இப்படத்தை தனுஷின் வொண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது.

அஸ்வினி, இதற்கு முன்பு ‘நில் பட்டே சன்னாட்டா’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். இது பல சர்வதேசப் பட விழாக்களில் விருதைப் பெற்றுள்ளது. அந்தப் படம்தான் தற்போது அம்மா கணக்கு என்கிற பெயரில் உருவாகிறது.

தன்னந்தனியாக தன் மகளை வளர்க்கும் ஒரு தாயின் கதைதான் அம்மா கணக்கு. அம்மாவாக ரேவதியும் மகளாக அமலா பாலும் நடிக்கிறார்கள்.