Home Tamil Movie Reviews தில்லுக்கு துட்டு – விமர்சனம்

தில்லுக்கு துட்டு – விமர்சனம்

653
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஹீரோவும் கட்டாயம் ஒரு பேய் படத்திலாவது நடிக்க வேண்டும் இப்போது இருக்கும் trend போல. அந்த வரிசையில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் N.ராதா & இராம.நாராயணன் நல்லாசியுடன் N.ராமசாமி தயாரித்திட சந்தானம் கதாநாயகராக நடித்து வெளிவந்திருக்கும் படம்தான் ‘தில்லுக்கு துட்டு'.

3
இயக்கம்: ராம்பாலா
ஒளிப்பதிவு: தீபக் குமார்
இசை: தமன்
தயாரிப்பு: ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் N.ராதா & இராம.நாராயணன்
நடிகர்கள்: சந்தானம், சனாயா, மொட்டை ராஜேந்திரன் கருணாஸ், ஆனந்த்ராஜ், சுரப் சுக்லா.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஹீரோவும் கட்டாயம் ஒரு பேய் படத்திலாவது நடிக்க வேண்டும் இப்போது இருக்கும் trend போல. அந்த வரிசையில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் N.ராதா & இராம.நாராயணன் நல்லாசியுடன் N.ராமசாமி தயாரித்திட சந்தானம் கதாநாயகராக நடித்து வெளிவந்திருக்கும் படம்தான் ‘தில்லுக்கு துட்டு’.

maxresdefault

சந்தானம் ஒரு தீவிர முருக பக்தர். அவர்தனது அப்பாவின் செல்லத்திலும், லோடு ஆட்டோ ஒன்றை கடனுக்கு வாங்கி ஒட்டும் மாமா கருணாசின் செல்வாக்கிலும் ஊர் வம்பு செய்தபடி சுற்றி வருகிறார். சந்தானத்தை விவரம் தெரியாத வயதிலிருந்து விழுந்து, விழுந்து காதலிக்கிறார் சேட்டு வீட்டுப் பெண் சனாயா.

சந்தானமும் அப்படியே காதலிக்க, இந்த விஷயம் சேட்டுக்கு தெரிய வருகிறது ஒரு அசாதாரண சூழலில், சந்தர்ப்ப வசத்தால் சந்தானத்தை சேட்டு பையனாக கருதும் காதலியின்சேட்டு அப்பா, பெற்றோரோடு சந்தானத்தை பெண் பார்க்க வரச்சொல்கிறார்.

maxresdefault (1)

சந்தானமும் அவ்வாறே, செய்ய அவரது குடும்பத்தை பார்த்ததும் கொதித்தெழும் சேட்டு, அவர்களது காதலுக்கு நோ சொல்லி அவசர அவசரமாக வேறு மாப்பிள்ளை பார்க்கிறார். அந்த வரனை, ஊடாலே புகுந்து அப்பெண்ணுக்கும் தனக்குமான காதலை உரக்கச் சொல்லி ஒடவிடுகிறார் சந்தானம்.

இதில் வெறுத்துப் போகும் சேட்டு, தன் செல்ல மகளின் மனம் கோணாமல் கூலிக்கு கொலை செய்யும் மொட்டை ராஜேந்திரன் குரூப்புடன் கைகோர்த்து சந்தானத்தை தீர்த்து கட்ட பிளான் பண்ணுகிறார். அதன் பின், சந்தானம் – சனாயாவின் திருமணத்திற்கு ஒ.கே சொல்லும் சேட்டு, திருமணத்தை இங்கு சிட்டியில் வைத்துக் கொண்டால், தன் குடும்ப கெளரவம். சுற்றம், நட்பால் தூற்றி வாரப்படும்.

maxresdefault (1)

அதனால், சிவன் கொண்டைமலை காட்டுப் பகுதியில் உள்ள ஒரு பெரும் பங்களாவில் இரு குடும்பங்களும் மட்டும் பங்கு கொண்டு திருமணத்தை ரகசியமாக நடத்தி முடிப்பது என சந்தானம் குடும்பம் நம்பும்படியாக கூறி தன் குடும்பத்துடன், சந்தானம் மற்றும் அவரது குடும்பத்தை மட்டிலும் அழைத்துப் போய், மொட்டை ராஜேந்திரன் மூலம் செயற்கை பேய்களை அந்த பங்களாவில் உருவாக்கிவிட்டு பயமுறுத்தியே சந்தானம் குடும்பத்தை தீர்த்து கட்டுவது தான் சேட்டின் எண்ணம்.

அதன்படி, ஒரு நாள், இரு குடும்பங்களும் சிவன் கொண்டைமலை பங்களாவிற்கு கிளம்புகின்றனர். நிஜத்தில் பல ஆண்டுகளாக நிறையபேய்கள் நிறைந்திருக்கும் அந்த பங்களா, இரு குடும்பத்தையும் என்ன பாடு படுத்துகிறது? என்பதையும் ராஜேந்திரனின் செயற்கை ப்பேய்களிடமிருந்தும்,

Santhanam-1

நிஜப் பேய்களிடமிருந்தும் சந்தானமும் அவரது குடும்பமும்தப்பித்தனரா? நிஜப் பேய்களிடமிருந்து சனாயாவின் சேட்டு குடும்பமும், மொட்டை ராஜேந்திரன் குரூப்பும் தப்பியதா? பேய்கள் பல கடந்து நாயகி சனாயாவின் கரம் பிடித்தாரா? என்பதை திக், திக் திகிலுடனும் கூடிய காமெடியுடனும் சிறப்பாக சொல்கிறது ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் கதை.

இனிமே ஹீரோதான் என பட்டையை கிளப்பி வரும் சந்தானம், இப்படத்திலும் இவருக்கு சூட் ஆகும் கதாப்பாத்திரத்தில் கலக்கியுள்ளார், காமெடி டான்ஸ் ஃபைட் என எல்லா ஏரியாவிலும் பவுண்டரி விலாசுகிறார்.

காமெடி படம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு ராஜேந்திரனை புக் செய்து விடலாம் போலும் இப்படத்திலும் செம பெர்ஃபாமன்ஸ் கொடுத்து அப்லாஸ் அள்ளுகிறார்.

dhilluku-dhuddu

ஹீரோயின் சனாயா கலக்கல்! இதுவரை பாம்பேயில் இருந்துவந்த ஹீரோயின்கள் என்ன செய்தார்களோ அதை இம்மி பிசகாமல் செய்கிறார். லிப் சிங்க், ஓவர் ஆக்டிங் ஆகியவற்றைக் கூட மன்னித்துவிடலாம். அது ஏன் பேய்க்கு போட்டியா அவ்வளவு மேக்கப்? என்று தெரியவில்லை. ஒரு காட்சியில் மட்டும் வருகிற பேய் ஹோட்டல் மல்லிகாவாக வரும் சாந்தினி, ஹீரோயினை விட அருமை.

படம் முழுக்க சந்தானத்துடன் பயணிக்கும் கருணாஸ், அவருடன் சேர்ந்து அடிக்கும் லூட்டி கலகலப்பூட்டியிருக்கிறது. பேய்க்குப் பயந்து இவர் நடுங்கும் காட்சிகள் எல்லாம் நம்மையும் அறியாமல் சிரிப்பை வரவழைத்திருக்கிறது.

சேட்டுவாக வரும் பாலிவுட் நடிகர் சௌரப் சுக்லாவுக்கு பொருத்தமான கதாபாத்திரம். அதை அவர் சிறப்பாகவே செய்திருக்கிறார். ஹைடெக்கான ரவுடியாக வரும் மொட்டை ராஜேந்திரன், சந்தானத்தை கொல்வதற்கு போடும் திட்டத்திலிருந்து இவரது நகைச்சுவை கலாட்டா ஆரம்பிக்கிறது.

dhilluku-dhuddu-movie-review-and-rating

படத்தின் இறுதிவரை நகைச்சுவைக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார். குறிப்பாக உண்மையான பேயிடம் இவர் அடிவாங்கும் காட்சிகள் உச்சக்கட்ட காமெடி.

சந்தானத்துக்கு அப்பாவாக வரும் ஆனந்த்ராஜ் ஹாலிவுட்டுக்கு இணையாக போடும் கெட்டப்புகள் எல்லாம் அசத்தல். நகைச்சுவையிலும் கலக்கியிருக்கிறார்.

சின்னத்திரையில் வந்த ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியில் பல படங்களை கிண்டல், கேலி செய்த ராம்பாலா, ஒரு முழுநீள நகைச்சுவை படத்தை திகில் கலந்து சொல்லியிருக்கிறார். குறைந்த கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு படம் முழுக்க நகைச்சுவை விருந்து கொடுப்பது என்பது சவாலான விஷயம். அதை இயக்குனர் சிறப்பாக கையாண்டிருக்கிறார்.

தமனின் இசையில் பாடல்கள் படத்தோடு பார்க்க நன்றாக உள்ளது, பிண்ணனி இசை படத்திற்கு பலம் சேர்கிறார். தீபக் குமார் பாடியின் ஒளிப்பதிவு ஒரு பக்கம் மிகவும் அழகாகவும் இன்னொரு பக்கம் பேய் பங்களாவில் இருட்டிலும் திகில் காட்டுகிறது.

மொத்தத்தில் ‘தில்லுக்கு துட்டு’ – காமெடிக்கு செம ஹிட்டு.