Home Tamil Cinema News மாதவனுடன் பைக் ரைட் போன திவ்யதர்ஷினி

மாதவனுடன் பைக் ரைட் போன திவ்யதர்ஷினி

220

22-1453440301-actor-madhavan-on-kwdd-600

விஜய் டிவியில் காபி வித் டிடி நிகழ்ச்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி நடிகர் மாதவனுடன் பைக்கில் சென்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். குடியரசு தினவிழாவை முன்னிட்டு விஜய் டிவியின் காபி வித் டிடி சிறப்பு நிகழ்ச்சியின் விருந்தினராக பங்கேற்றுள்ள மாதவன், தொகுப்பாளினி டிடியை பைக்கில் வைத்து அழைத்துச் சென்றுள்ளார்.

இறுதிச்சுற்று படத்தின் ரிலீஸ் வேலைகளில் பிசியாக இருக்கும் மாதவன் அந்த படத்தை புரமோட் செய்வதிலும் பிசியாகவே இருக்கிறார். டிவி நிகழ்ச்சிகளில் பேட்டி, கொடுப்பதோடு தொகுப்பாளின் குஷ்புவிற்கு முத்தம் கொடுத்து கூடவே பரபரப்பையும் ஏற்படுத்தினார். இப்போது பைக் ரைடு வந்திருக்கிறார்.

அலைபாயுதே தொடங்கி வேட்டை வரை பல படங்களில் நடித்திருந்தாலும் ரன் படம் தவிர அதிகம் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றி எதுவும் தரவில்லை நடிகர் மாதவன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாதவன் நடித்துள்ள படம் இறுதிச்சுற்று.

இந்தப் படத்தில் மாதவன் குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்திருக்கிறார். ஜனவரி 29ம் ரிலீஸ் ஆக உள்ளது இறுதிச்சுற்று. 7வருடங்கள் கழித்து மாதவன் சிங்கிள் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here